Home கலை உலகம் நிறுவன அதிபருடன் தகராறு: சந்தானம் மீது காவல்துறையில் புகார்!

நிறுவன அதிபருடன் தகராறு: சந்தானம் மீது காவல்துறையில் புகார்!

888
0
SHARE
Ad

????????????????????????????????????????????????சென்னை – சென்னை குன்றத்தூரில் நடிகர் சந்தானம், பாஜக பிரமுகர் ஒருவரின் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டிடம் ஒன்றைக் கட்டி வந்ததாகக் கூறப்படுகின்றது.

ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாகப் பேச நடிகர் சந்தானமும், அவரது மேலாளர் ரமேஷும் சம்பந்தப்பட்ட நிறுவன அதிபரின் அலுவலகத்திற்குச் சென்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அங்கு இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியிருக்கிறது. இதில் சந்தானத்திற்கும், நிறுவன அதிபருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, நிறுவன அதிபர், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சந்தானத்தின் மீது புகார் அளித்திருக்கிறார்.