Home நாடு நவம்பர் 12-ல் ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்!

நவம்பர் 12-ல் ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்!

1206
0
SHARE
Ad

Lim_Guan_ENg_1010_sகோலாலம்பூர் – சங்கப்பதிவிலாகாவின் விதிமுறைகளின் படி, ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் வரும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், கடந்த 2012-ம் ஆண்டு கட்சித் தேர்தலில் பட்டியலிடப்பட்ட அதே வேட்பாளர்கள் மற்றும் பேராளர்களிலேயே ஒட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

“2013-ம் ஆண்டு மறுதேர்தலை நாங்கள் நடத்தினாலும் கூட அதனை சங்கப்பதிவகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் புதிதாக மறுதேர்தலை நடத்தும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றும் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

வரும் நவம்பர் 12-ம் தேதி, ஷா ஆலம், ஐடியல் மாநாட்டு மையத்தில் இந்த மறுதேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.