Home நாடு பேஸ்புக்கில் பரவிய புகைப்படம் – காவல்துறை அதிகாரி அதிரடி நீக்கம்!

பேஸ்புக்கில் பரவிய புகைப்படம் – காவல்துறை அதிகாரி அதிரடி நீக்கம்!

1081
0
SHARE
Ad

johorpoliceஜோகூர் பாரு – மூவாரில் உள்ள இரவு கேளிக்கை மையம் ஒன்றில் 7 காவல்துறை அதிகாரிகள் ஆட்டம் போட்ட சம்பவம் பேஸ்புக்கில் பரவி அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜோகூர் செகாமட்டில் மற்றொரு சம்பவமும் நடந்திருக்கிறது.

காவல்துறை வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர், கவர்ச்சியாக உடையணிந்த பெண் ஒருவருடன் ‘நட்பு’ பாராட்டும் புகைப்படம் ஒன்று நட்பு ஊடகங்களில் பரவியது.

இதனையடுத்து, அந்த அதிகாரி உடனடியாக ரோந்துப் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக மாநில காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ முகமட் கலீல் காதர் முகமட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

என்றாலும், அச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.