கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தான் பிரதமராகப் பதவியேற்பார் என பிரதமர் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் ஆரூடம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து சேனல் நியூஸ் ஆசியாவுக்கு அப்துல் ரஹ்மான் டாலான் அளித்திருக்கும் பேட்டியில், “அடுத்தப் பொதுத்தேர்தலில் ஒருவேளை பக்காத்தான் வெற்றி பெற்றால், லிம் கிட் சியாங் தான் பிரதமராவார். துன் டாக்டர் மகாதீர் அல்ல. காரணம் லிம் கிட் சியாங் தான் முன்மொழியப்படுகிறார்”
“தேர்தலில் வெற்றி பெற அவர் (லிம்) துன் மகாதீரைப் பயன்படுத்துகிறார். துன் மகாதீர் அவரது வேலையை மறக்கலாம். அன்வார் இப்ராகிம் அவரது வேலையை மறக்கலாம். அது தான் லிம் கிட் சியாங். எனவே மலேசிய அரசியலை புரிந்து கொண்டு அந்த மனிதரைக் கவனியுங்கள்” என்று அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார்.
2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 14-வது பொதுத்தேர்தலில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.