Home உலகம் பிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை

பிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை

971
0
SHARE
Ad

WHO-western pacific-brisbane-09102017 (2)பிரிஸ்பேன் – ஆஸ்திரேலியா, பிரிஸ்பன் நகரில் இன்று திங்கட்கிழமை முதல் உலக சுகாதார அமைப்பின், மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் 68-வது கூட்டம் தொடங்கி நடைற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையேற்றிருக்கிறார்.

இக்கூட்டத்தை ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன் கிரேஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அதிகாரபூர்வ தொடக்க உரைக்கு முன்பாக, இந்த உலக சுகாதார அமைப்பின் மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் தலைவர் என்ற வகையில் டாக்டர் சுப்ரா இன்று உரையாற்றினார்.

WHO-western pacific-brisbane-09102017 (3)தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்துடன் டாக்டர் சுப்ரா தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகி மற்றொரு தலைவருக்கு வழிவிட்டுச் செல்வார்.

#TamilSchoolmychoice

உலக சுகாதார அமைப்பில் மேற்கு பசிபிக் வட்டாரம் என்பது மிக முக்கியமான அங்கமாகும். உலக சுகாதார அமைப்பின் ஆறு வட்டாரப் பிரிவுகளில் ஒன்றாக மேற்கு பசிபிக் வட்டாரம் செயல்படுகிறது. 1.8 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த வட்டாரத்தில், மொத்த உலக மக்கள் தொகையின் நான்கில் ஒரு பகுதியினர் வாழ்கின்றனர். இந்த செயற்குழுவில் இடம்பெற்றுள்ள 37 உறுப்பிய நாடுகளின் ஆண்டுக் கூட்டமான இந்தக் கூட்டத்தில், அடுத்து வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பின் பணிகளுக்கான திட்ட வரைவுகளும், செலவினங்களும் நிர்ணயிக்கப்படும்.

WHO-western pacific-brisbane-09102017 (1)