வாஷிங்டன் – நியூயார்க்கில் கடந்த நவம்பர் 1-ம் தேதி, பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகள் செல்லும் பாதையில் கனரக வாகனத்தால் 8 பேரை மோதிக் கொன்ற உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
சம்பவத்தன்று காவல்துறை நடத்திய தாக்குதலில் வயிற்றில் குண்டடி பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவனுக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனையோ அல்லது கியூபா குவான்தானாமோ பேவில் உள்ள இராணுவச் சிறையில் ஆயுள் தண்டனையோ வழங்கப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.