Home இந்தியா திருப்பதியில் தலைமுடி ஏலம் – 7.15 கோடி!

திருப்பதியில் தலைமுடி ஏலம் – 7.15 கோடி!

1331
0
SHARE
Ad

thirupathi-tirumalaதிருப்பதி – இந்தியாவில் அதிகமான பக்தர்கள் கூடும் திருக் கோவிலாகத் திகழும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் தினமும் இலட்சக்கணக்கானோர் வழிபாடு செய்வதுடன், தங்களின் தலைமுடியையும் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

அந்தத் தலைமுடிக்கு சந்தையில் பெரும் வரவேற்பு இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ‘விக்’ எனப்படும் செயற்கையாகத் தயாரிக்கப்படும் சிகைஅலங்காரங்களுக்கு இந்த தலைமுடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நேற்று திருப்பதியில் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட சுமார் 9 ஆயிரத்து 900 கிலோ எடை கொண்ட தலைமுடி இணையம் வழி ஏலத்துக்கு விடப்பட்டதில் 7.15 கோடி ரூபாய்க்கு அந்தத் தலைமுடி விற்பனையாகியிருக்கிறது.