Home நாடு 1எம்டிபி: சிங்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறார் எசாம் முகமட் நூர்!

1எம்டிபி: சிங்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறார் எசாம் முகமட் நூர்!

803
0
SHARE
Ad

ezam-mohd nor-ex-senatorகோலாலம்பூர் – முன்னாள் செனட்டரும் அம்னோ பிரமுகருமான எசாம் முகமட் நூர் சிங்கப்பூரில் தொடரப்பட்ட 1 எம்டிபி தொடர்பான வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பெறப்பட்ட தீர்ப்புகளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தான் தொடுத்திருக்கும் வழக்கில் ஆவணங்களாக இணைத்துச் சமர்ப்பிக்க விண்ணப்பித்துள்ளார்.

பிரதமர் நஜிப், 1 எம்டிபி, மற்றும் அந்நிறுவனத்தின் 15 முன்னாள் மற்றும் இந்நாள் இயக்குநர்கள் ஆகியோர் மீது 3.66 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையைத் திரும்பக் கோரும் வழக்கை எசாம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கைத் தொடர்ந்து சிங்கப்பூரில் நடைபெற்று வந்த 1எம்டிபி தொடர்பான வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பெற்று அவற்றை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வழக்கில் இணைத்துக் கொள்ள கால அவகாசம் கேட்டு எசாம் விண்ணப்பித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நஜிப் மற்றும் 1எம்டிபியின் 9 இயக்குநர்கள் தங்களின் முறைகேடான நடவடிக்கைகளால் 3.66 பில்லியன் ரிங்கிட் இழப்பை 1எம்டிபிக்கு ஏற்படுத்தினர் என எசாம் தனது வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார்.

எசாம் முகமட் நூர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அவரது செயலாளராகவும், பலம் பொருந்திய அம்னோ பிரமுகராகவும் உலா வந்தவர். பின்னர் அன்வாருடன் இணைந்து பிகேஆர் கட்சியில் அரசியல் பணியாற்றி வந்த அவர், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அம்னோவில் சேர்ந்தார். அவருக்கு செனட்டர் பதவியும் வழங்கப்பட்டது.

எனினும், 1எம்டிபி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, அதற்காகப் போராடப் போவதாகக் கூறி அம்னோவிலிருந்தும் விலகினார் எசாம் முகமட் நூர்.

நஜிப் மற்றும் 1எம்டிபிக்கு எதிராக எசாம் தொடுத்திருக்கும் வழக்கில் எசாம் முகமட் நூர் சார்பாக முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம் வழக்காடுகிறார்.