Home நாடு 14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

1027
0
SHARE
Ad

rosmah-mansorகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் ஆருடத்தை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோர் மறுத்திருக்கிறார்.

“ஒரு பிரதமரின் மனைவியாக, எனது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எனது முழு ஆதரவைத் தருவதற்கு மட்டுமே எனக்கு விருப்பம். அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை” என்று நிகழ்ச்சி ஒன்றில் ரோஸ்மா தெரிவித்திருக்கிறார்.

நட்பு ஊடகங்களில் தன்னைப் பற்றி பரவும் இது போன்ற ஆரூடங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ரோஸ்மா கேட்டுக் கொண்டிருக்கிறார்.