ஆம், அஜித்தின் அடுத்த படத்திற்கும் சிறுத்தை சிவா மீண்டும் இயக்குநராகியிருப்பது தமிழ்ப் பட உலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்தாண்டு (2018) தீபாவளித் திரையீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ‘விஸ்வாசம்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
அஜித்-சிவா கூட்டணியில் வெளிவரப் போகும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்தின் வித்தியாசமான தோற்றத்தோடு,படத்தின் அறிவிப்பும், படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Comments