Home உலகம் டிரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடையை’ உச்சநீதிமன்றம் ஏற்றது!

டிரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடையை’ உச்சநீதிமன்றம் ஏற்றது!

744
0
SHARE
Ad

Donald trump- aeroplane-file pic-வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின், ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு, முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.

சாடு, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கும் டிரம்பின் கொள்கைக்கு எதிரான சில சட்டரீதியான தலையீடுகளால், அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அதிபர் அலுவலகம் அந்தத் தடையை நீக்குபடி, அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

#TamilSchoolmychoice

அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 9 நீதிபதிகளில் 7 பேர் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம், சிறிய நீதிமன்றங்களில் தற்போது இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட, சர்ச்சைக்குரிய இந்த கொள்கையை இனி முழுமையாக செயல்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.