சென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம் காலை 10.30 மணி) தொடங்கியது.
தற்போது இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
அதில், 10,421 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளரான டிடிவி.தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில், ஒரு சுயேட்சை வேட்பாளர் இவ்வளவு பெரும்பான்மை வாக்குகளோடு முன்னிலை வகித்து வருவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகின்றது.
இரண்டாம் சுற்று முடிவுகள்:
தினகரன் (சுயேட்சை) – 10,421
மதுசூதனன் (அதிமுக) – 4,521
மருதுகணேஷ் (திமுக) – 2, 383
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 459
கரு.நாகராஜன் (பாஜக) – 125