Home இந்தியா ஆர்.கே.நகர் 2-ம் சுற்று முடிவுகள்: 10, 421 வாக்குகளோடு தினகரன் தொடர்ந்து முன்னிலை!

ஆர்.கே.நகர் 2-ம் சுற்று முடிவுகள்: 10, 421 வாக்குகளோடு தினகரன் தொடர்ந்து முன்னிலை!

1080
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று டிசம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் (மலேசிய நேரம் காலை 10.30 மணி) தொடங்கியது.

தற்போது இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

அதில், 10,421 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளரான டிடிவி.தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில், ஒரு சுயேட்சை வேட்பாளர் இவ்வளவு பெரும்பான்மை வாக்குகளோடு முன்னிலை வகித்து வருவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகின்றது.

இரண்டாம் சுற்று முடிவுகள்:

தினகரன் (சுயேட்சை) – 10,421

மதுசூதனன் (அதிமுக) – 4,521

மருதுகணேஷ் (திமுக) – 2, 383

கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 459

கரு.நாகராஜன் (பாஜக) – 125