மாஸ்கோ – ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
200 கிராம் எடையுடைய டிஎன்டி என்ற வெடிபொருளால் அவ்வெடிகுண்டு உருவாக்கப்பட்டிருந்ததாக ரஷிய காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ரஷியா தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் மிகப் பெரிய் அச்சுறுத்தலில் இருந்து வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில், சிலர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.