Home நாடு பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழும் பிரதமர் நஜிப்!

பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழும் பிரதமர் நஜிப்!

818
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – வழக்கமாகத் தான் சந்திக்கும் அரசியல் தலைவர்கள், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், முக்கிய அரசியல் கருத்துகள் என தனது டுவிட்டர் பக்கத்தை அலங்கரித்து வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வித்தியாசமான படத்தைப் பதிவிட்டார்.

அவருடைய மகள் நூர்யானா நஜ்வாவுக்குப் பிறந்த பேரன் அடாம் ரசாக்கை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைத்தான் நஜிப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

“எனது பேரன் எப்படி இருக்கிறான்? அழகாக இருக்கிறானா? அவனது தாத்தா பாட்டி ஜாடையில் இருக்கிறானா?” என்ற கேள்விகளோடு தனது பேரன் அடாம் ரசாக்கைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை நஜிப் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

najib-grandson-24122017