இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இங்குள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற கார்த்தி சிதம்பரம் மீதிலான தடுப்புக் காவல் விசாரணை தொடர்பிலான சில முக்கிய அம்சங்கள்:
- இன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் இருதரப்புகளின் வாதப் பிரதிவாதங்கள் – சுமார் 3 மணிநேரத்திற்கும் கூடுதலாக நீடித்தன.
- நீதிபதி தனது தீர்ப்பை வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பு தனக்கு சிறிது கால அவகாசம் தேவை என நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.
- நீதிமன்றம் வழங்கிய இடைவேளை கால அவகாசத்தில் நீதிமன்றத்தில் இருந்த தனது பெற்றோர்களைச் சந்திக்க கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் கார்த்தி தனது பெற்றோர்களைச் (ப.சிதம்பரம் – நளினி சிதம்பரம்) சந்தித்தார்.
- நீதிமன்ற விசாரணையின்போது, ப.சிதம்பரம், “மன உறுதியுடன் இருக்கவும். இறுதிவரையில் நான் பக்கபலமாக இருக்கிறேன்” என கார்த்தி சிதம்பரத்திடம் கூறியிருக்கிறார்.
- கார்த்தி சிதம்பரம் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கு முழு ஆலோசனைகளையும், வாதங்களுக்கான சட்ட நுணுக்கங்களையும் இன்று காலை முதல் தனது இல்லத்தில் சிதம்பரம் வழங்கியிருக்கிறார்.
- பின்னர் ப.சிதம்பரம் தனது மனைவி நளினி சிதம்பரத்துடன் நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகை தந்தார்.
-செல்லியல் தொகுப்பு
Comments