Home நாடு காற்பந்து சங்க தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துறந்தார்

காற்பந்து சங்க தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துறந்தார்

1063
0
SHARE
Ad

Tunku-Ismail Johor Crown Princessஜோகூர் பாரு – எதிர்பாராத திருப்பமாக மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் துங்கு இப்ராகிம் துறந்துள்ளார்.

கடந்த ஓராண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து வந்தார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அவர் இந்தப் பதவியை அலங்கரித்து வந்தார்.

211 உறுப்பிய நாடுகளைக் கொண்ட உலகக் காற்பந்து சம்மேளனத்தில் மலேசியா பழைய நிலையிலிருந்து கீழிறங்கி 178-வது நிலையை அடைந்ததைத் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேற்று அவர் தனது பொறுப்பைத் தொடர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இதுவரையில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு அனைத்துக்கும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். எனது மனைவிக்கும் குழந்தைக்கும்…தந்தை வீடு திரும்பிவிட்டேன்” என துங்கு மக்கோத்தா சவுத்தர்ன் ஜோகூர் என்ற தலைப்பிலான வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில் மலேசியக் காற்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்து தான் வழங்கிய சாதனைகளையும் துங்கு மக்கோத்தா பட்டியலிட்டுள்ளார்.