இலண்டன் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதிப்பதோடு, மலேசியக் குழுவுக்கும் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மாநாட்டின் இடைவேளையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடினார்.
நரேந்திர மோடியும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள இலண்டன் வந்துள்ளார்.