Home நாடு 81 வயது துங்கு ரசாலி மீண்டும் போட்டி! மகாதீரை அடுத்த மூத்த வேட்பாளர்!

81 வயது துங்கு ரசாலி மீண்டும் போட்டி! மகாதீரை அடுத்த மூத்த வேட்பாளர்!

879
0
SHARE
Ad
Tengku-Razaleigh
துங்கு ரசாலி ஹம்சா

கோத்தா பாரு – லங்காவி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இதுவரையில் 14-வது பொதுத் தேர்தலில் களம் காணப் போகும், வேட்பாளர்களில் மிக மூத்த வேட்பாளராக 93 வயது துன் மகாதீர் திகழ்கிறார்.

கடந்த 44 ஆண்டுகளாகத் தான் தற்காத்து வந்திருக்கும் குவா மூசாங் தொகுதியை மீண்டும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்காக்கப் போவதாக இன்று வியாழக்கிழமை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து துங்கு ரசாலி ஹம்சா மகாதீருக்கு அடுத்த மூத்த வேட்பாளராகத் திகழ்கிறார்.

அவருக்கு வயது 81.

#TamilSchoolmychoice

இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான குவா மூசாங்கில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போது துங்கு ரசாலி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

1974 முதல், தனது 37-வது வயதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக துங்கு ரசாலி இருந்து வருகிறார். முன்பு உலு கிளந்தான் என்று அழைக்கப்பட்ட இந்தத் தொகுதி பின்னர் குவா மூசாங் எனப் பெயர் மாற்றம் கண்டது.