Home நாடு தேர்தல் 14: கெப்போங்கில் கெராக்கான் வேட்பாளர் ஆங் போட்டி!

தேர்தல் 14: கெப்போங்கில் கெராக்கான் வேட்பாளர் ஆங் போட்டி!

951
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கெராக்கான் கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவின் இடைக்காலத் தலைவர் ஆங் சியாங் லியாங், 14-வது பொதுத்தேர்தலில், கெப்போங் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மா சியூ கியாங் இன்று வியாழக்கிழமை அறிவித்தார்.

கடந்த 13-வது தேர்தலில், தனது பாரம்பரிய தொகுதியான கெப்போங்கை மைபிபிபி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது கெராக்கான்.

ஆனால், வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மீண்டும் கெப்போங் தொகுதியை கெராக்கான் தேர்ந்தெடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

13-வது பொதுத்தேர்தலில், ஜசெக வேட்பாளர் டான் செங் கியாவை எதிர்த்து, மைபிபிபி கட்சி வேட்பாளர் சந்திரகுமணன் ஆறுமுகம் போட்டியிட்டு7,530 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

47,837 வாக்குகள் பெற்ற டான் செங் கியாவ், 40,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.