Home தேர்தல்-14 தேர்தல்-14: ஜோகூர் பாஸ் கட்சி வேட்பாளர்கள் – குமுதா மீண்டும் போட்டி

தேர்தல்-14: ஜோகூர் பாஸ் கட்சி வேட்பாளர்கள் – குமுதா மீண்டும் போட்டி

1736
0
SHARE
Ad
ஜோகூர் ஜெயா சட்டமன்ற பாஸ் வேட்பாளர் ஆர்.குமுதா

கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை பாஸ் கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டனர்.

ஜோகூர்

ஜோகூர் மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 41 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குறிப்பிடத்தக்க வேட்பாளர்களில் ஒருவரான பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் (உலாமாக்கள் மன்றத் தலைவர்) டாக்டர் மாபோட்ஸ் முகமட் பத்து பகாட் நாடாளுமன்றத்திலும், காம்பீர் சட்டமன்றத்திலும் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ எம்.அசோஜன் அந்தத் தொகுதியை மீண்டும் தற்காப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்டபடி இந்திய வேட்பாளரான ஆர்.குமுதா ஜோகூர் ஜெயா சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்ற பக்காத்தான் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாஸ் கட்சியின் போட்டி அதற்கு இடையூறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ் போட்டியிடும் தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் அந்தக் கட்சி வெல்ல முடியும் – போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை விழுக்காடு மலாய் வாக்குகளைப் பிரிக்க முடியும் என்பதை வைத்துத்தான் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றப் போவது யார் என்பது தெரியவரும்.