Home அரசியல் சபாவில் போட்டியிடத் தயாரா? – அன்வார் மற்றும் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடும் சிலாம்...

சபாவில் போட்டியிடத் தயாரா? – அன்வார் மற்றும் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடும் சிலாம் நாடாளுமன்ற உறுப்பினர்

722
0
SHARE
Ad

Salleh Kalbiலகாட் டத்து,மார்ச் 28 – லகாட் டத்து ஊடுருவல் விவகாரம் தேசிய முன்னணி அரசின் நாடகம் என்று கூறும் எதிர்கட்சிகள் தைரியமிருந்தால் வரும் பொதுத்தேர்தலில் சபாவில் போட்டியிடட்டும் என்று சிலாம் நாடாளுமன்ற உறுப்பினர் சாலே கால்பி (படம்) சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“லகாட் டத்து விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் எதிர்கட்சியைச் சேர்ந்த அன்வார் இப்ராகிமோ அல்லது ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கோ தைரியமிருந்தால் வருகிற 13 ஆவது பொதுத்தேர்தலில் சபா மாநிலத்தில் போட்டியிடட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் சபாவில் வசிக்கும் சீன மற்றும் மலாய் இனம் அல்லாத மக்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருப்பதாக எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் சாலே கால்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.