Home தேர்தல்-14 நஜிப் மக்களுக்கே முதலிடம் தருகிறார் – டோனி பெர்னாண்டஸ் கருத்து!

நஜிப் மக்களுக்கே முதலிடம் தருகிறார் – டோனி பெர்னாண்டஸ் கருத்து!

1568
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் கொள்கைகளை ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அங்கீகரித்திருக்கிறார்.

நஜிப் தலைமையிலான ஆட்சி “மக்களுக்கு முதலிடம் தருகிறது”, அதனால் தமது நிறுவனம் வளர் பேருதவியாக இருந்ததாக டோனி பெர்னாண்டஸ் யூடியூப்பில் தெரிவித்திருக்கிறார்.

“நான் வழக்கமாகக் கூறுவேன். அரசாங்கமும், பிரதமரும்: மக்களுக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் முடிவுகள் எளிதாகும்.

#TamilSchoolmychoice

“ஏர் ஆசியா இரண்டு விமானங்களில் தொடங்கி தற்போது 230 விமானங்களை இயக்குகிறது. ஆண்டுக்கு 200,000 பயணிகளிலிருந்து தொடங்கி, இந்த ஆண்டு 89 மில்லியன் பயணிகளுடன் பயணம் செய்திருக்கிறோம்.

“பிரதமர் மக்களை முதலில் வைக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். அதேவேளையில் எல்லா இடங்களிலும் போட்டிகள் இருந்தாலும் கூட ஏர் ஆசியா வளர்வதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.

“அரசாங்கமும், பிரதமரும் டோனி பெர்னாண்டசை முதலில் வைக்கவில்லை, ஏர் ஆசியாவை வைக்கவில்லை, மற்ற ஜிஎல்சிகளையும் இல்லை. ஆனால் நாட்டை முதலில் வைக்கிறார். அதோடு மலேசியர்கள் அதிகம் பயனடைய வேண்டுமென்று நினைக்கிறார்” என டோனி பேசிய காணொளி நெகாராகூ யுடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.