ஷா ஆலாம் – சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் 10 பேர் கொண்ட ஆட்சிக் குழு நாளை திங்கட்கிழமை (மே 14) பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகேஆர் கட்சி சார்பாக 4 பேரும், ஜசெக சார்பில் 3 பேரும் அமானா கட்சி சார்பில் இருவரும் பிரிபூமி பெர்சாத்து கட்சி சார்பில் ஒருவரும் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
2008-ஆம் ஆண்டில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியபோது, ஆட்சிக் குழு பிரதிநிதித்துவம், பிகேஆர் கட்சிக்கு வழங்கப்பட்டு, டாக்டர் சேவியர் ஜெயகுமார் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
ஆனால், 2013 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்தியருக்கான ஆட்சிக்குழு பிரதிநித்துவம் ஜசெகவுக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக, கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினராகக் கடந்த தவணையில் பணியாற்றினார்.
இந்த முறை பிகேஆர் கட்சிக்கு இந்தியர் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என்ற ஆரூடங்கள் நிலவும் வேளையில் பிகேஆர் கட்சியின் சார்பில் நியமிக்கப்படும் நால்வரில் குணராஜூம் ஒருவராக இருப்பார் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.
பிகேஆர் கட்சி சார்பில் செந்தோசா (கிள்ளான்) சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட குணராஜ், 33,600 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
NEGERI | SELANGOR |
---|---|
DUN | N.48 – SENTOSA |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 33600 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
GUNARAJ (PKR) | 38106 |
RAJAN MANIKESAVAN (PAS) | 1722 |
DATO’ R.S.MANIAM (BN) | 4506 |
M . THILAI (PRM) | 79 |
PS RAJOO (BEBAS – KUNCI) | 95 |
ஆட்சிக் குழு பிரதிநிதித்துவம் ஜசெகவுக்கே மீண்டும் வழங்கப்பட்டால், கணபதி ராவ் தொடர்ந்து இரண்டாவது தவணைக்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்படலாம்.
ஜசெக சார்பில் கோத்தா கமுனிங் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்ட கணபதி ராவ் (படம்) 21,639 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
NEGERI | SELANGOR |
---|---|
DUN | N.50 – KOTA KEMUNING |
PARTI MENANG | PKR |
MAJORITI UNDI | 21639 |
NAMA PADA KERTAS UNDI | BIL. UNDI |
ABDUL RAZAK ISMAIL (PSM) | 226 |
BURHAN BIN ADNAN (PAS) | 6978 |
GANABATIRAU VERAMAN (PKR) | 28617 |
TIEW HOCK HUAT (BN) | 4601 |
RAJASEKARAN (BEBAS – KUNCI) | 93 |