Home நாடு ஒரே நேரத்தில் அதிகமானோர் யோகா பயிற்சி – உலக சாதனை

ஒரே நேரத்தில் அதிகமானோர் யோகா பயிற்சி – உலக சாதனை

1040
0
SHARE
Ad

பத்துமலை – இன்று வியாழக்கிழமை (ஜூன் 21) உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2,100-க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

கெராக்கான் உதவித் தலைவரும், முன்னாள் வெளியுறவு துணையமைச்சருமான கோகிலன் பிள்ளையும், இந்தியத் தூதர் மிருதுள் குமாரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்

மலேசிய வரலாற்றில் மிக அதிகமானோர் ஒரே நேரத்தில் ஒருசேர யோகா பயிற்சி மேற்கொண்ட காரணத்தால் இன்றைய நிகழ்ச்சி ஓர் உலக சாதனையாக கருதப்படுகிறது என அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான டாக்டர் சி.வி.ஜெயந்தி தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவுக்கான இந்தியத் தூதரகமும், தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

#TamilSchoolmychoice

Comments