Home நாடு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு புதிய தலைவர்

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு புதிய தலைவர்

1006
0
SHARE
Ad
முகமட் அமின்

கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நடப்புத் தலைவர் (மேயர்) முகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் செப்டம்பர் 1-ஆம் தேதி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமட் அமின் பதவி விலகியிருப்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.

முகமட் அமின் கடந்த 40 ஆண்டுகளாக மாநகரசபையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அடுத்த புதிய மாநகரசபைத் தலைவர் யார் என்பதை அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யவிருப்பதாகவும் காலிட் சமாட் தெரிவித்தார்.