சென்னை – ஷங்கர்-ரஜினி-அக்ஷய்குமார் கூட்டணியின் “2.0” திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த முன்னோட்டம் வெளியிடப்பட்ட உடனேயே இதுவரையில் யூடியூப் தளத்தில் மொத்தம் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.
500 கோடி ரூபாய் செலவில் 2.0 உருவாகி வருகிறது. இதுவரை வெளியான இந்தியப் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையையும், 2.0 பெற்றுள்ளது.
2.0 படத்தின் அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: