Home Video வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

1143
0
SHARE
Ad

வாஷிங்டன் – வழக்கமான தீபாவளி செய்தியை அமெரிக்க இந்தியர்களுக்கு வழங்கவில்லை என்றும் – ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு கொண்டாடப்படவில்லை என்றும் – எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 13-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் முக்கிய இந்தியப் புள்ளிகளுடனும், அமெரிக்க அரசு அதிகாரிகளுடனும் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க இந்தியர்கள் அந்நாட்டுக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பைப் பாராட்டியிருக்கும் டிரம்ப் இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தீபாவளியைக் குத்து விளக்கேற்றி டிரம்ப் வெள்ளை மாளிகையில் தொடக்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

அந்த சமயத்தில் அவர் ஆற்றிய உரையை கீழ்க்காணும் யூடியூப் இணையத் தளத்தில் காணலாம்: