Home நாடு “ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து

“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து

1208
0
SHARE
Ad

சிரம்பான் – எதிர்வரும் ரந்தாவ் சட்டமன்ற மறுதேர்தலில் டாக்டர் ஸ்ரீராமுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றாக இருக்காது என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

முகமட் ஹசானுக்கு எதிராக மற்றொரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரைடா போன்ற தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரபிசி ரம்லியும் ரந்தாவ் வேட்பாளராகக் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அன்வாரும் கூறியிருக்கிறார்.

ஆனால், ரபிசி ரம்லியோ, ரந்தாவ் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஸ்ரீராமே பொருத்தமான வேட்பாளர் எனக் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துக் கருத்துரைத்த அன்வார், “14-வது பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிட முன்வந்த ஸ்ரீராம் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மறுதேர்தல் நடைபெறுகிறது. ஆனால் இந்த முறை அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றல்ல” என்றார்.

எனினும், ரந்தாவ் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் நடைமுறைகள் படி முடிவெடுக்கப்படும் என்று கூறிய அன்வார், சம்பந்தப்பட்ட தொகுதி, மாநிலத்திற்கான தலைவர்களிடம் கலந்தாலோசித்த பின்னர், கட்சியின் உச்சமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று கூறினார்.

ரந்தாவ் தொகுதி அதிகமான மலாய்-முஸ்லீம் வாக்காளர்களைக் கொண்டிருந்தாலும், அதனைக் காரணம் காட்டி மலாய் வேட்பாளர்களை மட்டும் பரிசீலிப்பது என்பது முறையல்ல என்றும் சீன, இந்திய வாக்காளர்களும் போட்டியிட பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

ரந்தாவ் தொகுதியில் 53 விழுக்காடு மலாய் வாக்காளர்களும், 19 விழுக்காடு சீன வாக்காளர்களும், 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர். வாக்காளர்களில் இரண்டாவது பெரிய பிரிவினராக இந்தியர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ரந்தாவ் மறுதேர்தலில் மீண்டும் முகமட் ஹசானே நிறுத்தப்படுவார் என அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி உடனடியாக அறிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த ஸ்ரீராம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி தடுத்து நிறுத்தப்பட்டபோது…