Home நாடு கேமரன் மலை: 2013 பெருவெள்ளத்திற்கு தெனாகா நேஷனல் பொறுப்பேற்க வேண்டும்

கேமரன் மலை: 2013 பெருவெள்ளத்திற்கு தெனாகா நேஷனல் பொறுப்பேற்க வேண்டும்

1268
0
SHARE
Ad

புத்ராஜெயா: 5 ஆண்டுகளுக்கு முன்பு கேமரன் மலை, பெர்தாம் வெலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (Tenaga Nasional Berhad) நிறுவனமே பொறுப்பு என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சுல்தான் அபு பாகார் அணையை நிர்வகிக்கும் பொறுப்பு அந்நிறுவனத்திற்கே உடையது என நீதிபதி டத்தோ துங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்தார்.

இவ்வழக்கினை தொடுத்த 100 வாதிகளுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து இழப்புகளையும் மதிப்பீடு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, துங்கு மைமுன், வாதிகளுக்கு 20,000 ரிங்கிட் வழங்க உத்தரவிட்டார். கடந்த 2013, அக்டோபர் 23-ம் தேதி, தெனாகா நேஷனல் நிறுவனம், மூன்று முறை அணையிலிருந்து நீரை வெளியேற்றியதால் சில சொத்துகள் அழிக்கப்பட்டதோடு நால்வர் உயிர் இழந்தனர்.   

#TamilSchoolmychoice

வாதிகளின் வழக்கறிஞர்களான எம். மனோகரன் மற்றும் எம். குமார், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி தெனாகா நேஷனல் நிறுவனம் மீது வழக்குத் தொடுத்தனர். நள்ளிரவு மணி 12:20-க்கு, கணத்த மழையின் காரணமாக அந்நிறுவனம் எந்தவொரு முன் எச்சரிக்கை ஒலியும் எழுப்பாமல் நீரைத் திறந்து விட்டதில் கேமரன் மலையே நிலைகுலைந்துப் போனது.