Home நாடு அம்னோவில் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும்!- கைரி ஜமாலுடின்

அம்னோவில் விரைவில் தேர்தல் நடக்க வேண்டும்!- கைரி ஜமாலுடின்

969
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கைரி ஜாமாலுடின் அம்னோ கட்சித் தேர்தலைக் கூடுமான வரையில் விரைவுப் படுத்தும்படி தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்ததாக அம்னோ கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியாகுவதைத் தடுக்கும் முயற்சியாக இது அமையும் என அவர் கூறினார்.

மேலும், கூறிய அவர், அம்னோ உறுப்பினர்கள் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற இயலும். பெர்சத்து கட்சியோ, அன்வாரோ, அல்லது பாஸ் கட்சியோ அம்னோவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இயலாது என்றார்.

#TamilSchoolmychoice

இன்று அம்னோ கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாலளர், ராட்சி ஷேக் அகமட் கட்சியை விட்டு வெளியேறி பெர்சத்து கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் இக்மால் இஸ்ஹாம் அப்துல் அசீஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கைரி பல முறை சாஹிட் ஹாமிடியின் தலைமைத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தி, அவர் பாஸ் கட்சியுடன் இணைந்து செயல் படுவதை கண்டித்து வந்தது குறிப்பிடத்தக்கது.