Home நாடு 62 வேட்பாளர்கள் மீது மலேசியத் தேர்தல் ஆணையம் காவல் துறையில் புகார்!

62 வேட்பாளர்கள் மீது மலேசியத் தேர்தல் ஆணையம் காவல் துறையில் புகார்!

821
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 14-வது பொதுத் தேர்தலின் போது ஏற்பட்ட செலவுகளை அறிவிக்காத 62 வேட்பாளர்கள் மீது மலேசியத் தேர்தல்ஆணையம் காவல் துறையில் புகார் செய்துள்ளது எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹருண் கூறினார்.

சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியே,இப்புகார்கள் செய்யப்பட்டன என அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேர்தல் குற்றச்சாட்டு சட்டம் 1954 கீழ், தேர்தல் முடிவுகள் அறிவித்த 31 நாட்களுக்குள் அந்தந்தத் தொகுதி வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களோ தேர்தலின் போது ஏற்பட்ட செலவுகளைத் தேர்தல் ஆணையத்திடம் அறிவித்திருக்க வேண்டும். அதாவது, 14-வது பொதுத் தேர்தலின் முடிவுகள் மே 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதிவுச் செய்யபட்ட நிலையில், 31 நாட்களுக்குள் அவர்கள் இதனைச் செய்திருக்க வேண்டும்.     

அனைத்து வேட்பாளர்களும் ஜூன் 28-குள் தங்கள் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்திருக்க வேண்டும், ஆனால் 62 வேட்பாளர்கள் அவ்வாறு செய்யத் தவறி விட்டனர். நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட 14 பேரும், மாநில சட்டமன்றங்களில் போட்டியிட்ட 48 பேரும் இவ்வாறு செய்யத் தவறி விட்டனர்”, என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்க முடியாது எனவும் அசார் கூறினார்.  சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே நுழைவதிலிருந்து தடுக்கப்படுவதோடு, தண்டிக்கவும் படலாம் என்று அசார் கூறினார்.