Home நாடு அடிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்!

அடிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிலாங்கூர் சுல்தான்!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுல்தான் ஷாரபுடின் இட்ரிஸ் ஷா, முகமட் அடிப் முகமட் காசிமின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். அடிப்பின் தந்தையாருக்கு எழுதியக் கடிதம் ஒன்றின் வாயிலாக சுல்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் வகையில் தைரியமாக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அவரது இறப்பு அனைத்து மக்களாலும் உணரப்பட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முகமட் அடிப், நேற்று திங்கட்கிழமை தேசிய இருதய சிகிச்சை மையத்தில் இரவு 9.41 மணிக்கு காலமானார்.

நுரையீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளின் சீர்குலைவு காரணமாக முகமட் அடிப்பின் நிலை மோசமாகி விட்டது என ஐஜெஎன் கூறியது. இன்று செவ்வாய்க்கிழமை சோஹோர் தொழுகைக்குப் பின்பு அடிப்பின் நல்லுடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.