Home நாடு முகமட் அடிப் உடல் கோலா கெடாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

முகமட் அடிப் உடல் கோலா கெடாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

1532
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: முகமட் அடிப் முகமட் காசிம் உடல் கோலா கெடாவில் உள்ள அவரது சொந்தா ஊரான கம்போங் தெபங்காவ்விற்கு கொண்டு வரப்பட்டு மதிய தொழுகைக்குப் பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.

24 வயதான முகமட் அடிப்பின் நல்லுடல் கோலாலம்பூரில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டு, காலை 10:30 மணியளவில் தெபங்காவ் தேசியப் பள்ளியில் தரை இறங்கியது.

அடிப்பின் பெற்றோர்கள் அவரின் நல்லுடலை பெற்றுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் பலத்தக் காயமடைந்து, நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 17) தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐஜெஎன்) இரவு 9:41 மணிக்கு அடிப் காலமானார். வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி அடிப்பிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.