Home நாடு சீ பீல்ட் கோயில், ஓன் சிட்டி வளாகத்தில் காவல் துறையினர் குவிப்பு!

சீ பீல்ட் கோயில், ஓன் சிட்டி வளாகத்தில் காவல் துறையினர் குவிப்பு!

1816
0
SHARE
Ad

சுபாங் ஜெயா: சுமார் 392 காவல் துறையினர், சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் ஓன் சிட்டி வணிகக் கட்டிட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுச் செய்திக்குப் பிறகு, நள்ளிரவில் காவல் துறையினர் இப்பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி அனுப்பப்பட்டனர் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

முகமட் அடிப் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி சீ பீல்ட் கோயில் கலவரத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, நேற்று இரவு 9:41 மணி அளவில் காலமானார்.