Home நாடு அதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்

அதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்

1444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிக்கொண்டிருப்பது நல்லதொரு சூழலை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை, ஆனாலும், தற்போது அதிகமான வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஈரான், மத்திய ஆசியாவிலிருந்து வெளிநாட்டவர்கள் இந்நாட்டிற்கு வருவது நிலைமையை மேலும் குழப்ப நிலைக்குத் தள்ளி உள்ளது என அவர் குறிப்பிட்டார். இம்மாதிரியான சூழலில் யார் மலேசியர், யார் வெளிநாட்டவர் எனும் சந்தேகங்கள் வருவதாகவும் பிரதமர் கூறினார் .

இந்த நிலைக்குக் காரணம் மலேசியர்களே என பிரதமர் குற்றம் சாட்டினார். வேலை வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளாமல், திருமண வாய்ப்புகளையும் வெளிநாட்டவர்களுக்கு விட்டு கொடுத்து விடுகிறோம் என்றார்.