அதன் தலைமை இயக்குனர் எஸ். இலட்சுமணன் கூறுகையில், மித்ரா இந்தியர்களின் எல்லா நிலையிலான கல்வி, சமூக நலன், பொருளாதாரம் மற்றும் தொழில், கொள்கை திட்டமிடல், மற்றும் சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தார்.
கல்வி, பொருளாதாரம், சமூக நல்வாழ்வு மற்றும் மனித ஆற்றல் அம்சங்கள் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சியை இந்திய சமூகம் பெறுவதில் மித்ரா முனைப்புடன் இயங்கும் என அவர் கூறினார். இந்தப் புதிய அடையாளமானது, இவ்வமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
Comments