Home நாடு பெட்ரோல் சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை!

பெட்ரோல் சில்லறை விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை!

790
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்ரோல் எண்ணெய் சில்லறை விலைகளில், வெள்ளிக்கிழமை வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையில் தற்போதைய வீழ்ச்சி காரணமாக, வாராந்திர மிதவை அடிப்படையிலான ஏற்ற இறக்க விலை முறை அடிப்படையில், பெட்ரோல் சில்லறை விலை குறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மலேசிய எண்ணெய் நிலைய வணிகர்கள் சங்கம், இந்த விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் கோரிக்கையை விவாதித்தப் பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனவே, ஜனவரி 2-ஆம் தேதி, அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

பிரதமர் மகாதீர் முகமட் விரைவில் எண்ணெய் நிலைய உரிமையாளர்களை சந்திக்கவுள்ளார்” என்றும் லிம் கூறினார்.

தற்போது உள்ள விலையான, ரோன் 95 எண்ணெயின் சில்லறை விலை லிட்டருக்கு 2.20 ரிங்கிட்டிற்கும், ரோன் 97, 2.50 ரிங்கிட்டிற்கும் மற்றும் டீசல் 2.18 ரிங்கிட்டிற்கும் விற்கப்படும்.

கடந்த டிசம்பர் 24-ம் தேதி, விலைவாசி கொள்கைகளை வாராந்திர அடிப்படையில் மறுபரிசீலனை செய்வதோடு, முதல் தேதியிலிருந்து விலைகள் குறைக்கப்படும் என லிம் கூறியிருந்தார்.