Home நாடு விலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை!

விலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை!

1669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னும் சில தினங்களில் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட இருக்கும் தமிழ் மக்கள், பொங்கலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதாக ஸ்டார் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பொங்கலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களான பானைகள், கரும்பு, மாவிலை, பால் போன்ற பொருட்களை மக்கள் வாங்கத் தொடங்கி விட்டதாக பிரிக்பீல்ட்ஸ் பகுதி கடை உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும்,  இம்முறை பானையின் விலை 20 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், மக்கள் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் பானைகளை வாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

வருகிற, ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் திருவிழா அனேகத் தமிழர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றிக் கூறும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.