Home இந்தியா தமிழ் நாடு: குடி நீர், சாலை, தெரு விளக்கு பிரச்சனைகளைக் களைய செயலி!

தமிழ் நாடு: குடி நீர், சாலை, தெரு விளக்கு பிரச்சனைகளைக் களைய செயலி!

765
0
SHARE
Ad

சென்னை: குடிநீர் வசதிகள், சாலைகள் மற்றும் தெரு விளக்குகள் ஆகிய மூன்று அடிப்படை பிரச்சினைகளை கண்காணிக்கவும், உடனுக்குடன் சரிசெய்யவும், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனம் (TNEGA) செயலி ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

இந்த செயலியின் மூலமாக தேர்தெடுக்கப்பட்ட பகுதி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்), நகர்ப் புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் விநியோகங்கள், தெரு விளக்கு செயல்பாடுகள், சாலைகளின் நிலை, ஆகியவற்றை அலுவலகங்களிலிருந்தே கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.