Home நாடு பினாங்கு: மொய்யின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

பினாங்கு: மொய்யின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

756
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பினாங்கு பாலத்தில் நடந்த சாலை விபத்தில் மரணமுற்ற 20 வயது நிரம்பிய மொய் யுன் பெங்கின் குடும்பத்தினர், அவரது அகால மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

காவல் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாக டென்னிஸ் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட, மரணமுற்றவரின் மூத்த சகோதரர் கூறினார்.

“எங்கள் குடும்பத்தினர், மொய்யிக்கு நடந்ததை ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும், அவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதியை நிலை நாட்ட வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும், உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல், பொதுமக்கள் அடிப்படையில்லாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாமென்றும், அவ்வாறு செய்வது விசாரணையைத் தொந்தரவு செய்யும்படி ஆகிவிடும் எனவும் அவர் கூறினார்.

வருகிற ஜனவரி 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) பெராபிட் சீனக் கல்லறையில் மொய்க்கான இறுதி சடங்கு நடைபெறும் என்று டென்னிஸ் கூறினார்.