தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான, தாக்சின் ஷினாவத்ரா பிரதிநிதித்த கட்சியைப் பிரதிநிதித்து அவர் களத்தில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாய்லாந்தில் வருகிற மார்ச் மாதம் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்து வரும் தாய்லாந்தில், ஜனநாயகம் மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமையும் என நம்பப்படுகிறது.
நாட்டின் தற்போதைய பிரதமரான பிரயூத் சான் -ஒச்சாவும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார்.
Comments