Home இந்தியா தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது!

1008
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை, இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த நிலையில், 2019- 2020-கான தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தேர்தல் நெருக்கத்தில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட திட்டமிடப்பட்டதால், மக்களை கவரும் வகையில் சில முக்கிய அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என முன்னமே எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிதிநிலை அறிக்கையில், வறுமை ஒழிப்புத் திட்டத்திற்காக 1031 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க 1700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழ் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்த, குடிப்பழக்கத்தை ஒழிக்கும் வண்ணமாக சுமார் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக்கல்விக்கு 28,757 கோடி ரூபாயும், விவசாயத்துக்கு 10,500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆயினும், இந்த நிதிநிலை அறிக்கையை ஒட்டி விளக்கமளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, ஏமாற்றமளிக்ககூடிய வகையில் அமைந்துள்ளது எனக் கூறினார்.