Home நாடு தமிழவேள் அமரர் ஆதி.குமணன் பிறந்தநாள் நிகழ்ச்சி!

தமிழவேள் அமரர் ஆதி.குமணன் பிறந்தநாள் நிகழ்ச்சி!

1184
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் எழுத்தாளர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு அவர்களின் மனதில் நீங்காது நிலைக் கொண்ட தமிழவேள் ஆதி.குமணனின் பிறந்தநாள் நிகழ்ச்சியை, நாளை (சனிக்கிழமை) கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் தனது துணிச்சலான எழுத்துக்களாலும்கருத்துக்களாலும்மக்கள் மனங்களில் தனியிடத்தைப் பிடித்து, ‘தமிழவேள்என்ற பாராட்டு மொழியைப் பெற்றவர் அமரர் ஆதி.குமணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் என அனைவரையும் எழுத்தாளர் சங்கம் அழைக்கின்றது.   

#TamilSchoolmychoice

2005-ஆம் ஆண்டில் காலமான அமரர் ஆதி.குமணனுக்கு, அவரை நினைவில் வைத்திருக்கும் வகையில், அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.