Home நாடு நெடுஞ்சாலைகளை ஒவ்வொன்றாக அரசாங்கம் கையகப்படுத்தும்!- அஸ்மின்

நெடுஞ்சாலைகளை ஒவ்வொன்றாக அரசாங்கம் கையகப்படுத்தும்!- அஸ்மின்

648
0
SHARE
Ad

செமினி: நாட்டின் நெடுஞ்சாலைகளை பராமரித்து தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது எனவும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார். பல்வேறு நிலைகளில், அவைகட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என அவர் விவரித்தார்.

கையகப்படுத்தல் ஒப்பந்தங்கள் மற்றும் கையகப்படுத்தியப் பின்னர் நடக்கும் நிதி தாக்கங்களை மதிப்பாய்வு செய்வது போன்ற விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தபட  வேண்டியுள்ளதை அவர் தெளிவுப்படுத்தினார்.

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனமான பிலாஸ் நிறுவனத்திடமிருந்து, ஏன் நெடுஞ்சாலை பராமரிப்பதை அரசாங்கம் எடுக்கவில்லை என அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் வெளியிட்ட அறிக்கைக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, நான்கு நெடுஞ்சாலைகளுக்கு அரசாங்கம் அறிவித்த நெடுஞ்சாலை கட்டண கழிவு திட்டத்திற்கு, மக்களிடமிருந்து கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. பெரும்பாலும் அதிருப்தி அலைகளாகவே அவை வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.