Home நாடு ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏப்ரல் 13-இல் நடைபெறும்!

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏப்ரல் 13-இல் நடைபெறும்!

740
0
SHARE
Ad

புத்ராஜெயா: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேலும், வேட்பாளர் பதிவு மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

ரந்தாவ் சட்டமன்றம் காலியானது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் ஆணையத்திற்கு பிப்ரவரி 26-ஆம் தேதி கிடைக்கப்பட்டதாகவும், ஏப்ரல் 9-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.