சென்னை: ‘கும்கி’ திரைப்படப் புகழ் விக்ரம் பிரபு சமீபக்காலமாக நடித்து வரும் திரைப்படங்கள் எதிர்பாத்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை.
இதற்கிடையே, பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருவதாக செய்தி வெளியாகி இருந்தது.
தற்போது, அந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மணிரத்னத்தின் உதவி இயக்குனரான தனசேகரன் இந்தப் படத்தினை இயக்க உள்ளார்.
இத்திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் இவருக்கு மீண்டும் வாய்ப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் இவருடன் முக்கியப் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ், இணையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.