Home இந்தியா தமிழ் நாடு: இறுதி கட்ட வேட்புமனு தாக்கல் மும்முரம்!

தமிழ் நாடு: இறுதி கட்ட வேட்புமனு தாக்கல் மும்முரம்!

1171
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களின் 97 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறதுஅதே நாளில், தமிழ் நாட்டில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாகவுள்ள ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-இல் தொடங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை செவ்வாய்க்கிழமை கடைசி நாள் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல் மூன்று நாட்கள் மனுதாக்கல் மந்தமாக இருந்ததாகவும், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கலை செய்திருந்தனர் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 22-ஆம் தேதி, முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்தனர்

#TamilSchoolmychoice

எனவே இன்று திங்கட்கிழமையும், நாளையும் ஏராளமானோர் மனுதாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. சமர்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள்,  மார்ச் 27-ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் எனவும், அவற்றை மீண்டும் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இறுதி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அன்றைய தினம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது