Home உலகம் வெளிநாடுகளிலிருந்து அத்துமீறி வருபவர்களை சுட்டுக் கொல்லலாம்!- டிரம்ப்

வெளிநாடுகளிலிருந்து அத்துமீறி வருபவர்களை சுட்டுக் கொல்லலாம்!- டிரம்ப்

1455
0
SHARE
Ad

வாஷிங்டன்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, வெள்ளை இன தேசியவாதிகளுக்குச் சாதகமாக பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். 50 பேரின் உயிரைக் கொன்ற ஒருவரின் கொள்கையைப் பற்றியும், அவ்வாறு செய்வது தவறில்லை எனக் கூறியதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவ்வாறு கூறிய அவர், பின்பு மெக்சிக்கோவிலிருந்து அத்துமீறி வருபவர்களைத்தான் தாம் குறிப்பிட்டதாக விளக்கினார். ஆயினும், பலர் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.   

‘இம்மாதிரியான சூழல் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கும் மக்களுக்கும் அநீதியாக முடியும். எங்கிருந்தோ மக்கள் கொத்து கொத்தாக நாட்டுக்குள் குவிகிறார்கள். நமது நாட்டின் பாதுகாப்பை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.  இம்மாதிரியாக நுழையும் மக்களை நாங்கள் கைப்பற்றி வருகிறோம். மற்ற நாடுகளைப் போல நாங்கள் அவர்களை துப்பாக்கிகளோடு தடுத்து நிறுத்தவில்லை. அவர்களாகவே வருகிறார்கள், நாங்கள் பிடித்து வைக்கிறோம். சுடுவது சரியான முறைதான், ஆனால், நான் அதனை செய்ய மாட்டேன்” என டிரம்ப் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியது.

#TamilSchoolmychoice

அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது சரியென்றும், அத்துமீறி நாடிற்குள் குடியேறியவர்களை கையாள்வதில் அதுதான் சிறந்த வழிஎன்றும் பின்பு திருத்திக் கூறியதை அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிப்பரப்பியது.