முந்தைய தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை சம்பந்தப்பட்டிருக்கும் பணத்தின் தொகை மிக அதிகம் என தேர்தல் ஆணையம் கூறியது.
இதனால் மிக கடுமையான நடவடிக்கைகள், கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், பண பலத்தை தடுக்க தீவிரமான, ஒளிவுமறைவற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. மதுபானங்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Comments